×

டேக் டெவலப்பர்ஸ் சார்பில் ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள்: சென்னையில் முதன்முறை அறிமுகம்

சென்னை: சென்னையின் மிகவும் நம்பகமான வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான, டேக் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (DAC Developers Pvt. Ltd.) தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக மேடவாக்கம் மற்றும் தாம்பரத்தில் ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்துள்ளது. தரை, முதல் தளம் வரை அனைத்தையும் குறுக்குவெட்டில் காண்பிக்கும் இந்த நேரடி வீட்டு அனுபவ மையங்களில், தங்கள் கனவு இல்லங்களை உருவாக்கப்போகும் பொருட்கள் எவை, எவை என்று வீடு வாங்குபவர்கள் இந்த மையங்களில் நேரடியாக பார்த்தும், தொட்டும் உணர முடியும்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்ரமணியன், 1050 சதுர அடி அனுபவ மையத்தை மேடவாக்கத்திலும், 800 சதுர அடி மையத்தை தாம்பரத்திலும் திறந்து வைத்தார். அத்துடன் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிதாக மேடவாக்கத்தில் அமையவுள்ள டேக் மெடாலியன் மற்றும் தாம்பரத்தில் அமையவுள்ள டேக் மார்ஷல் ஆகிய 2 அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்பு திட்டங்களும் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டன. டேக் மெடாலியன் என்பது மேடவாக்கத்தில் 125 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஆகும். தாம்பரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள டேக் மார்ஷல் 114 யூனிட்களை பல்வேறு அளவுகளில் கொண்டுள்ளது.

இதுபற்றி டேக் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண் இயக்குநர் எஸ்.சதீஷ் குமார் கூறுகையில், ‘‘பொறியியல் சார்ந்த புதுமை, வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் நேரடி அனுபவம் ஆகிய 3ம் தான் எங்களது முக்கிய கொள்கை. தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக இவற்றை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் நேரடி வீட்டு அனுபவ மையங்களின் அறிமுகமானது வெளிப்படைத்தன்மையின் புதிய அம்சத்தை காட்சிப்படுத்துகிறது. வீடு வாங்குபவர்கள் எப்போதும் விலையை ஒப்பிடுவது, அமைவிடத்தை தேர்ந்தெடுப்பது, மாதிரி வீடுகளை பார்வையிடுவது ஆகியவற்றையே இதுவரை மேற்கொண்டு வந்தனர்.

கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டின் மற்ற கட்டுமான கூறுகள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. எனவே, எங்கள் நேரடி வீட்டு அனுபவ மையங்களில் இதுபற்றிய முதல் தகவலை அவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, வீடு வாங்குவதற்கு முன் நேரடியாகப் பரிசோதித்து, தொட்டு அனுபவித்துப் பார்த்து இனி வாங்க முடியும். நேரடி வீட்டு அனுபவ மையங்களில் பல்வேறு அம்சங்களின் குறுக்குவெட்டு தோற்றம், இடைச்சுவர்கள், நெடுவரிசை தூண்கள், உத்தர தூண்கள், கதவுகள், ஜன்னல்கள், தரைகள், சுவிட்ச் பாக்ஸ்கள், பிளம்பிங் ஷாப்ட்கள், கைப்பிடிகள், மாடங்களின் தரை போன்ற வெளிப்புற கூறுகள் உட்பட பல்வேறு உறுப்புகளின் குறுக்குவெட்டுகளை நேரடியாக ஆய்வு செய்யலாம்,’’ என்றார்.

The post டேக் டெவலப்பர்ஸ் சார்பில் ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள்: சென்னையில் முதன்முறை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,DAC Developers Pvt Ltd ,DAC ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...